இயற்கை உபாதைகளை கூட கழிக்கவிடாமல் தங்களை மறைமுகமாக சித்ரவதை செய்வதாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என இரண்டாவது நாளாக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை அண்ணாசாலையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர் ஒருவர் கூறும்போது, “அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 5000-க்கும் அதிகமான செவிலியர்கள் இங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் எங்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் எப்படியாவது கூட்டத்தை கலைக்கத்தான் போலீசார் திட்டமிட்டுள்ளனர். நேற்று இரவே கைது செய்யப்படலாம் என பேசப்பட்டது. ஆனால் கைது செய்யவில்லை. கொட்டும் பனியிலும் விடிய விடிய எங்களது போராட்டம் தொடர்ந்துள்ளது. எங்களின் குழந்தைகளும் இந்த கொட்டும் பனியில் கஷ்டப்பட்டனர். இயற்கை உபாதாகளை கூட கழிக்கவிடாமல் இங்குள்ள அனைத்து கழிவறைகளும் அடைக்கப்பட்டுள்ளன. அப்படியென்றால்தான் நாங்கள் வெளியே செல்வோம் என மறைமுகமாக சித்ரவதை செய்யப்படுகிறது. மனித உரிமை மறுக்கப்பட்டு, மீறப்படுகிறது” என தெரிவித்தார்.
இதனிடையே செவிலியரின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும் என தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போராட்டத்தை செவிலியர்கள் உடனே கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
Loading More post
அமமுக தலைமையை ஏற்றால் அதிமுக-பாஜகவுடன் கூட்டணிக்கு தயார் - டிடிவி தினகரன்
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'சாகச' பிரசாரம், வைரல் 'கன்டென்ட்'... இளையோர் வாக்குகளை ஈர்க்க ராகுல் முயற்சிக்கிறாரா?
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: திமுக மீது மார்க்சிஸ்ட் அதிருப்தி?
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?