கனமழையால் நீரில் மூழ்கிய 10 ஆயிரம் ஹெக்டர் நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் பல இடங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து, கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியத்தில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த 10 ஆயிரம் ஹெக்டர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் தங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். மேலும் விளைநிலங்கள் நீரில் மூழ்கியதற்கு வடிகால், வாய்க்கால்கள் தூர்வாரப்படாததே காரணம் என்று அவர்கள் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட நிலங்களைக் கணக்கெடுத்து தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்