[X] Close >

வங்கி ஏஜெண்டுகள் தாக்கியதில் உயிரிழந்த விவசாயி மீது வழக்குப் பதிவு

Case-filed-on-the-farmer-Gnanasekaran-of-Pondhai-village-who-suffered-a-heart-attack-following-an-alleged-scuffle-with-loan-recovery-agents

வங்கி ஏஜெண்டுகள் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படும் விவசாயி ஞானசேகரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


Advertisement

திருவண்ணாமலை மாவட்டம் தாணிப்பாடி அருகே போந்தை என்ற கிராமத்தை சேர்ந்த விவசாயி ஞானசேகரன், டிராக்டர் கடன் தொகையை வாங்க வந்த போது, வங்கி ஏஜென்ட்கள் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், இரும்பு ராடால் தாக்கி கொல்ல முயன்றதாக ஞானசேகரன் மற்றும் அவரது மகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயியை தாக்கியதாக கைது செய்யப்பட்ட வங்கி ஏஜெண்ட் வெங்கடபதி அளித்த புகாரின் பேரில் தாணிப்பாடி போலீசாரால் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயி ஞானசேகரன் நவம்பர் 4-ம் தேதி உயிரிழந்த நிலையில், அடுத்த நாள் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close