ஷாருக் பிறந்தநாளில் 13 மொபைல் போன்கள் திருட்டு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஷாருக் கான் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அவரது வீட்டு முன்பு திரண்ட ரசிகர்களின் மொபைல் போன்கள் திருட்டு போயின. 


Advertisement

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவர் தனது வீட்டில் கேக் வெட்டி கொண்டாடினார். அவரை காண்பதற்காக  காலை முதலே அவரது மும்பை பாந்த்ரா வீட்டின் முன்பு ஆயிரக்கணகான ரசிகர்கள் வெகு நேரமாக காத்திருந்தனர். அவரை காண பல மணி நேரமாக கூடியிருந்த கூட்டம் மாலை வரை கலையவே இல்லை. 


அப்போது அங்கே குழுமி இருந்த ரசிகர்கள் 13 பேரிடம் இருந்த விலை உயர்ந்த மொபைல் போன்கள் திருடு போனது. கூட்டத்தை சாதகமாக பயன்படுத்தி கொண்ட திருட்டு கும்பல் மொத்த போன்களையும் பிக் பாக்கெட் அடித்து சென்றுள்ளது. இது தொடர்பாக 13 பேர் சார்பிலும் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தன் வீட்டின் முன்பாக கூடியிருந்த ரசிகர்களை தனது வீட்டு மாடியில் இருந்து தன் மகனுடன் கையசைத்து ஷாருக் கான் அன்பை தெரிவித்தார்.


Advertisement

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ”ஒரு சூரியனின் ஒளிக்கதிர்.. ஒரு கடலின் அன்பு. .நீங்கள் ஒவ்வொரு வருடமும் என் மீது காட்டும் அன்பிற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி..” என தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement