கும்பி எரியுது, குடல் கருகுது இந்த வீண் ஆடம்பர கட்-அவுட் ஒரு கேடா?” என்று பொதுமக்கள், கேள்வி எழுப்புவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கட்அவுட் கலாச்சாரத்தை தவிர்க்க வேண்டுமென திமுக தொண்டர்களுக்கு பல முறை அன்பு வேண்டுகோள் விடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் பேனர் குறித்த உத்தரவு கவனத்திற்கு உரியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் திருச்சியில் அரசு சார்பில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் மறைந்த தலைவர்களின் படங்களுக்கு இணையாக முதல்வர், துணை முதல்வர் படம் இடம் பெற்று இருந்தது நீதிமன்ற அவமதிப்பு என்று குற்றம்சாட்டியுள்ளார். டெங்கு காய்ச்சல் மற்றும் கந்துவட்டியால் தமிழகத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், அதுகுறித்து கவலைப்படாமல் எம்.ஜி.ஆருக்கு விழா என்று கூறி, தங்களுக்கு கட்அவுட் வைத்துக்கொள்ளும் சுயமோகிகளின் கைகளில் தமிழகம் சிக்கித் தவிப்பதாக மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தாழ்ந்து கிடக்கும் தமிழகத்தின் நிலைக்குக் காரணமான உருவங்களை எல்லாம் உயர்ந்து நிற்கும் பேனர், கட்-அவுட்டுகளில், பார்க்கும் பொதுமக்கள், “கும்பி எரியுது, குடல் கருகுது இந்த வீண் ஆடம்பர கட்-அவுட் ஒரு கேடா?” என்று கேட்பதாக அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Loading More post
மு.க.ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார் - முதல்வர் பழனிசாமி
"வாய்ப்புகள் கிடைக்கும் கவலை வேண்டாம்" - ஓய்வறையில் உத்வேகமாக பேசிய ரஹானே!
ரஷ்யா: அரசை விமர்சித்ததாக நாவல்னி கைது - விடுவிக்கக் கோரி மக்கள் போராட்டம்!
ஆதரவாளர்களுடன் ஆலோசனை: பாஜகவில் இணைகிறாரா புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம்?
தொடர் விடுமுறை: கோயம்பேட்டில் குவிந்த மக்கள்.. போதிய பேருந்து வசதியில்லாமல் அவதி!
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!