சினிமா விற்பன்னர் ஐ.வி.சசி: ட்விட்டரில் கமல் இரங்கல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிரபல திரைப்பட இயக்குனர் ஐ.வி.சசி மறைவுக்கு கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.


Advertisement

பிரபல திரைப்பட இயக்குனர் ஐ.வி.சசி சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 69. 

1970 மற்றும் 80-களில் பிரபலமாக இருந்தவர் மலையாள இயக்குனர் ஐ.வி.சசி. இவர்,தமிழில், கமல், ரஜினி இணைந்து நடித்த ’அலாவுதீனும் அற்புத விளக்கும்’, விஜயகுமார், ஸ்ரீதேவி நடித்த, ’பகலில் ஒரு இரவு’, கமல்ஹாசன் நடித்த குரு, ரஜினிகாந்த் நடித்த ’எல்லாம் உன் கைராசி’, காளி, ஜெயராம் நடித்த ’கோலங்கள்’ உட்பட பல படங்களை இயக்கியவர். இவர் தனது படங்களில் ஹீரோயினாக நடித்த சீமாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 
இவரது மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் “நெடுங்கால நண்பரும் இணையிலா சினிமா தொழில் விற்பன்னருமான ஐ.வி.சசி காலமானார். என் சகோதரி சீமாசசிக்கும் குடும்பத்தாருக்கும் அன்பும் அனுதாபமும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement