திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உடல்நலக்குறைவால் கீழே விழுந்த யானை, மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனளிக்காததால் உயிரிழந்தது.
பழனியில் வனப்பகுதியை ஒட்டியுள்ள வீரப்பன் என்பவரது தோட்டத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை, 4 வயது குட்டியுடன் தஞ்சமடைந்தது. உடலில் காயங்கள் இருந்த நிலையில், தாய் யானை உணவு உண்ண முடியாமல் கீழே விழுந்தது. தாய் யானையின் அருகே இருந்த 4 வயதுடைய குட்டியானை, வனத்துறையினரை அருகில் வரவிடாமல் துரத்தியது. இதனால் சிகிச்சை அளிக்க தாமதமானது. பின்னர் குட்டி யானையை விரட்டி விட்டு நடக்க முடியாமல் இருந்த அந்த யானைக்கு வனத்துறை கால்நடை மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர். காயத்தில் நோய்தொற்று ஏற்பட்டதால், அந்த யானை காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அதனையடுத்து 50 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் யானை உயிரிழந்தது. தாய் யானையை விட்டு பிரியாமல் குட்டி யானையும் அந்த பகுதியில் சுற்றி வருகிறது.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?