நீட் தேர்வை கருணாநிதி ஆதரித்திருப்பார்: தமிழிசை சவுந்தரராஜன்

Karunanidhi-has-supported-the-NEET--TTamil-issai-Soundararjan

திமுக தலைவர் கருணாநிதி இன்று தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தால், நீட் தேர்வை அவர் நிச்சயம் வரவேற்றிருப்பார் என பாரதிய ஜனதா தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 


Advertisement

நீட் தேர்வை எதிர்க்கும் கட்சிகளுக்கு பதிலடி தரும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழிசை சவுந்தரராஜன், " கடந்த 2010-ஆம் ஆண்டு நீட் தேர்விற்கான பிள்ளையார் சுழி போடும்போது ஏன் ஸ்டாலின் அதனை கடுமையாக எதிர்க்கவில்லை..? 21016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு வருடத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டு மற்றபடி நீட் தேர்வு இருக்கும் என சொன்னபோது, அப்போதே ஸ்டாலின் ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை..? வாய் புளித்ததோ..? மாங்காய் புளித்ததோ..? என சொல்லமாட்டேன்.

ஏனென்றால் நான் கருணாநிதியின் மகன் என சொல்லும் ஸ்டாலின் அவர்களே, கருணாநிதி இன்று முழுமையான துடிதுடிப்பான அரசியலில் ஈடுபட்டிருந்தால் தமிழக மக்களின் நலன் கருதி நீட் தேர்வை ஆதரித்து அறிக்கை வெளியிட்டியிருப்பார். நீட் தேர்வு, நவோதயா பள்ளி ஆகிய விவகாரங்களை வைத்து திமுக உள்ளிட்ட கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கின்றன" என்றார்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement