மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி, ஜோதிகாவுடன், தானும் நடிக்க இருப்பதை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உறுதிப்படுத்தியுள்ளார்.
காற்று வெளியிடை படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்க உள்ள படத்தில் விஜய்சேதுபதி, பஹத் பாசில், அரவிந்த் சாமி, துல்கர் சல்மான் ஆகிய நான்கு ஹீரோக்கள் நடிக்க இருக்கின்றனர். இந்நிலையில் ஜோதிகா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர் நடித்துள்ள 'மகளிர் மட்டும்' விரைவில் ரிலீஸாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து பாலா இயக்கும் நாச்சியார் படத்தில் நடித்து வரும் ஜோதிகா, அதனை முடித்துவிட்டு மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் வடசென்னை, துருவ நட்சத்திரம், பாலிவுட்டில் ’டாடி’ஆகிய படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷும் மணிரத்னம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஆமாம். உண்மைதான். மணிரத்னம் இயக்க உள்ள அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.
Loading More post
ஏப்ரல் 9ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடக்கம்?
திருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம்; தொலைநோக்கு திட்டங்களை அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்
நாகர்கோவிலில் இன்று அமித் ஷா பரப்புரை!
தொகுதி பங்கீட்டில் திமுக-காங்கிரஸ் இடையே சுமூக உடன்பாடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
அனல்பறக்கும் மேற்கு வங்க தேர்தல் களம்.. பிரதமர் மோடி இன்று பிரசாரம்.!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!