முரசொலி நாளிதழின் பவள விழாவை முன்னிட்டு, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் காட்சி அரங்கம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த காட்சி அரங்கத்தை இந்து நாளிதழின் தலைவர் இந்து என்.ராம் திறந்து வைத்தார். திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார். அவர்கள் இருவருக்கும் காட்சி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த அரிய புகைப்படங்கள் குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் விளக்கினார்.
இந்த காட்சி அரங்கத்தில் திராவிட இயக்கம் கடந்து வந்த பாதை தொடர்பான அரிய புகைப்படங்களும், உடன்பிறப்புகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி எழுதிய கடிதங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், அறிஞர் அண்ணாவின் கடிதங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
திமுக தலைவர் மு.கருணாநிதியின் மெழுகுச் சிலையும் அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் உட்பட அனைவரும் பங்கேற்றனர்.
இதற்கிடையே இன்று மாலை கலைவாணர் அரங்கில் நடக்கும் வாழ்த்தரங்க நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
Loading More post
அரசு அறிவிக்க உள்ளவற்றை ஸ்டாலின் முன்கூட்டியே தெரிந்துகொள்கிறார் - முதல்வர்
பாஜகவில் இணைந்த ரவுடிகள் என பட்டியலை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்
தா.பாண்டியன் மறைவு: அரசியல் கட்சித் தலைவர்களின் நினைவலைகள்
வாட் வரி 2% குறைப்பு: புதுச்சேரியில் குறைகிறது பெட்ரோல், டீசல் விலை!
வீரன் பொல்லாலனுக்கு மணிமண்டபம்: தமிழக அரசு அறிவிப்பு
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்