"பாகிஸ்தான் சுதந்திரதினத்தை கொண்டாடுவோம்"..... சர்ச்சையில் பாலிவுட் பாடகர் மிகா சிங்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய சுதந்திர தினத்தை மட்டுமல்லாது பாகிஸ்தான் சுதந்திர தினத்தையும் சேர்த்து கொண்டாடுவோம் என்று பீகாரை சேர்ந்த பிரபல பாடகர் மிகா சிங் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.


Advertisement

பாலிவுட்டின் பிரபல பாடகர் மிகா சிங். இவர், அமெரிக்காவின் சிகாகோ மற்றும் ஹூஸ்டன் நகரில் ஆகஸ்ட் 12 மற்றும் 13ம் தேதிகளில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், "வாருங்கள் என்னோடு இணைந்து இந்திய சுதந்திர தினம் மற்றும் நமது பாகிஸ்தான் சுதந்திர தினத்தையும் கொண்டாடுங்கள்" என்று கூறியிருக்கிறார்.

மிகா சிங்கின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் மிகா சிங்கை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். "எல்லையில் ஏராளமான இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்படுகின்றனர். இதற்கு காரணமான பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடச் சொல்வது கேவலமாக உள்ளது" என ஒருவர் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். மிகா சிங்கின் இந்த கருத்திற்கு மகாராஷ்டிரா நவநிர்மாண் கட்சி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவில் ஹமாரா பாகிஸ்தான் பாடும் மிகா சிங், மகராஷ்டிராவில் இதை மைக் பிடித்து பாட முடியுமா என அக்கட்சி சவால் விட்டுள்ளது.  


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement