[X] Close

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய நடால்

Subscribe
Nadal-enters-into-quarter-final-of-French-Open

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் காலிறுதி சுற்றுக்கு நடப்பு சாம்பியனான ரபேல் நடால் தகுதிப் பெற்றுள்ளார்.


Advertisement

பிரான்ஸ் தலைநகர் பாரிசிஸ் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற 4-ஆவது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 7-5, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் இத்தாலி வீரர் ஜானி சினரை வீழ்த்தினார். இதனால் காலிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றார் நடால்.

image


Advertisement

ஆடவர் பிரிவில் நடைபெற்ற மற்றொரு 4-ஆவது சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிச், இத்தாலி வீரர் மசெட்டியிடம் மோதினார். இதில் டை பிரேக்கர் வரை சென்w முதல் 2 செட்களை மசெட்டி கைப்பற்றி அசத்தினார். அதன்பின்னர் சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச் 3வது செட்டை 6-1 எனவும், 4வதுசெட்டை 6-0 எனவும் கைப்பற்றினார்.

பின்பு 5வது செட்டில் ஜோகோவிச் 4-0 என முன்னிலையில் இருந்தார். அப்போது மசெட்டிக்கு காயம் ஏற்பட்டதால் அவர் போட்டியில் இருந்து விலகினார். இதனையடுத்து காலிறுதிக்கு தகுதிப்பெற்றார் ஜோகாவிச்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close