தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவிகித ஒதுக்கீடு வழங்கும் அரசாணை செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவீதம் ஒதுக்கீடு வழங்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை கடந்த ஜூலை 14ஆம் தேதி நீதிமன்றம் ரத்து செய்தது. நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு, அரசாணைக்கு ஆதரவாக மாநில பாடத்திட்ட மாணவர்கள் தொடர்ந்த இணைப்பு மனுக்கள், சிபிஎஸ்இ மாணவர்கள் தொடர்ந்த கேவியட் மனுக்கள் ஆகியவற்றின் மீது நீதிபதிகள் நூட்டி ராமமோகன் ராவ், எம்.தண்டபாணி ஆகியோர் முன்னிலையில் மூன்று நாட்களாக விசாரணை நடைபெற்று வந்தது. மூன்று தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கடந்த வெள்ளிக்கிழமை தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்நிலையில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், 85 சதவிகித உள்ஒதுக்கீட்டை ரத்து செய்யும் தனி நீதிபதியின் தீர்ப்பு செல்லும். என்றும் இது தொடர்பாக தமிழக அரசின் அரசாணை செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!