[X] Close >

ரூ.1000 கோடி சொத்துள்ள ஆதீன மடாதிபதியைக் காணவில்லை

missing-thondai-aadhinam

ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகள் கொண்ட காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடாதிபதியைக் காணவில்லை என சிவகாஞ்சி போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.


Advertisement

தொண்டை மண்டல ஆதீன மடத்தின் 232-வது மடாதிபதியாக திருவம்பல தேசிய ஞான பிரகாச பரமாசியார் இருந்து வருகிறார். இந்த மடத்துக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அசையா சொத்துகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் காணாமல் போனதாகவும், அவரை கண்டுபிடித்துத் தரும்படியும் தொண்டை மண்டல ஆதீன முதலியார் சங்கத்தின் மாநிலத்தலைவர் ராதாகிருஷ்ணன் போலீஸில் புகார் செய்துள்ளார்.

இதனிடையே தொண்டை மண்டல ஆதீன மடத்தில் நித்தியானந்தாவின் படத்தை வைத்து அவரது சீடர்கள் பூஜை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. எனவே, மடாதிபதி கடத்தப்பட்டாரா அல்லது நித்தியானந்தாவின் ஆதரவாளராக மாறினாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close