[X] Close

அங்கீகாரமின்றி ஆங்கில மருந்து பரிந்துரை: 'சாப்பாட்டு ராமன்' யூடியூபர் பொற்செழியன் கைது

Subscribe

முறையான அங்கீகாரம் இல்லாமல் ஆங்கில மருந்துகளை பரிந்துரைத்தது தொடர்பான புகாரில் சாப்பாட்டு ராமன் யூடியூப் சேனல் மூலம் பிரபலமடைந்த பொற்செழியன் கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

அதிக உணவுகளை ஒரே நேரத்தில் சாப்பிட்டு பிரபலமானவர் 'சாப்பாட்டு ராமன்' யுடியூப் சேனலை நடத்தும் பொற்செழியன். பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரது  யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இவர் சின்னசேலம் பகுதியை அடுத்த கூகையூர் பகுதியில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக, மாற்றுவழி மருத்துவம் படித்ததற்கான சான்றுடன் மக்களுக்கு மருந்துகளை வழங்கி வந்துள்ளார்.

image


Advertisement

இந்நிலையில், இவர் ஆங்கில மருந்துகளை பரிந்துரைப்பதாக ஆட்சியருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரது கிளினிக்கில் சோதனை நடத்தினர். அப்போது, கொரோனா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு, ஆங்கில மருந்துகளை பரிந்துரைத்தது தெரியவந்ததோடு, அங்கிருந்து ஆங்கில மருந்துகளும் கைப்பற்றப்பட்டன. முறையான அங்கீகாரம் இல்லாமல் ஆங்கில மருந்துகளை பரிந்துரைத்த அவர் மீது 3பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பொற்செழியனை கைது செய்தனர்.

இதையடுத்து, அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில், அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. பின்னர், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனாவுக்கு சித்த மருத்துவம் நல்லது எனக் கூறி வந்த பொற்செழியன், மறைமுகமாக ஆங்கில மருந்துகளை பரிந்துரைத்து வந்தது அவரது யூடியூப் சேனல் சப்ஸ்கிரைபர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close