[X] Close

"கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன" - உலக சுகாதார நிறுவனம் வேதனை

Subscribe
World-At-Risk-Of-vaccine-Apartheid--Warns-World-Health-Organization-Chief

உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதோனாம், “கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகம் முழுவதும், நிறவெறி அபாயமும் - பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் எழுந்துள்ளது” எனக்கூறி வருத்தமும் வேதனையும் தெரிவித்து எச்சரித்துள்ளார். பொருளாதார ரீதியாக முன்னோக்கி இருக்கும் நாடுகள் மற்றும் ஏழை மற்றும் மிகவும் பின்தங்கிய பொருளாதாரம் கொண்டிருக்கும் நாடுகளுக்கான தடுப்பூசி விநியோகம் பற்றி பேசுகையில் அவர் இதை தெரிவித்துள்ளார்.


Advertisement

இதுபற்றி அவர் விரிவாக பேசும்போது, “நிறவெறி மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளினால் தடுப்பூசி விநியோகம் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் அப்படியானவொரு மோசமான நிலைப்பாட்டில் இருக்கிறது. தரவுகளுடன் சொல்லவேண்டுமென்றால், உலகில் தயாரிக்கப்பட்டிருக்கும் தடுப்பூசிகளில், 45 சதவிகித தடுப்பூசியை உலகில் 15 சதவிகித மக்களை மட்டுமே தன்னகத்தே கொண்டிருக்கும் பணக்கார நாடுகள் வைத்துள்ளன. மக்கள் தொகையில் 50 சதவிகித மக்களைகொண்டிருக்கும் ஏழை மற்றும் மிகவும் பின்தங்கிய பொருளாதாரம் கொண்டிருக்கும் நாடுகளுக்கு 17 சதவிகித தடுப்பூசிகளே கிடைத்துள்ளது" எனக்கூறியுள்ளார்.

image


Advertisement

இந்த பேதங்களுக்கான காரணமாக 'தடுப்பூசியை பிற நாடுகளுடன் பகிர்ந்துக்கொள்ளாமல் பணக்கார நாடுகள் செயல்படுகின்றன' என உலக சுகாதார நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். தடுப்பூசி பகிர்ந்துக்கொள்வதை காட்டிலும், அதை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு நிதி வழங்குவது, தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது, தொழில்நுட்ப உதவிகள் வழங்குவது போன்றவை நல்ல தீர்வை தீர்வை தருமென சொல்லியுள்ளனர்.

“நிறைய பணக்கார நாடுகள், தங்களின் நாட்டிலுள்ள குழந்தைகள், பருவ வயதினருக்கு தடுப்பூசி விநியோகிக்க தொடங்கிவிட்டது. ஆனால் பல ஏழை – பின்தங்கிய நடுத்தர வர்க்க நாடுகள், தங்கள் நாட்டில் கொரோனா ஆபத்து அதிகமிருக்கும் நபர்களான முன்களப் பணியாளர்கள், வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்குக்கூட தடுப்பூசி விநியோகிக்காமல் இருக்கிறது. இப்படி நாடுகளுக்கு இடையே நிலவும் தடுப்பூசி வேறுபாடு, வேதனை தருகிறது” எனக் கூறியுள்ளார் டெட்ராஸ் அதேனாம்.

இந்தளவுக்கு உலக சுகாதார நிறுவனம் பணக்கார நாடுகளின் மீது அதிருப்தி தெரிவித்திருக்கும் நிலையில், அடுத்த ஆறு வாரத்தில் 80 மில்லியன் கொரோனா தடுப்பூசியை உலக்க நாடுகளோடு பகிர்ந்துக்கொள்ள வேண்டுமென அமெரிக்க அதிபர் பைடன் இன்று அறிவித்துள்ளார். அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பைசர், மாடர்னா, ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகள் பகிரப்படும் என சொல்லப்பட்டுள்ளது.


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close