[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்
  • BREAKING-NEWS 2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி

நியூயார்க் டு சிட்னி: இடைவிடாது 19 மணி நேரம் பறந்த பயணிகள் விமானம்..!

qantas-test-flight-completes-record-19-hour-non-stop-flight-from-new-york-to-sydney

இடைவிடாது நீண்டதூரம் செல்லக்கூடிய குவாண்டஸ் நிறுவனத்தின் நவீன சொகுசு பயணிகள் விமானம் 19 மணி நேர பயணத்திற்குப் பின்னர் சிட்னியில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

QF 787-9 என்ற விமானம் நியூயார்க் நகரிலிருந்து புறப்பட்டு 19 மணி 16 நிமிடங்களில் சிட்னி நகரைச் சென்றடைந்தது. நீண்டதூர விமான பயணங்களை மேற்கொள்ள திட்டமிட்டு வரும் குவாண்டஸ் நிறுவனம் அதற்கான சோதனை முயற்சிகளில் இறங்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் பிரிட்டனிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு நீண்டதூர விமானங்களை இயக்குவது அந்நிறுவனத்தின் முக்கிய இலக்காகும். 

அதன்படி, இந்த முதற்கட்ட சோதனை நடத்தப்பட்டது. சுமார் 16 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவை இடையில் எங்கும் பெட்ரோல் நிரப்ப இறக்காமல் இயக்க வேண்டும் என்பதற்காக விமானத்தில் 49 பேர் மட்டுமே அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றிருப்பது விமானப் போக்குவரத்துத்துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று குவாண்டஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஆலன் ஜோய்ஸ் தெரிவித்துள்ளார். 

இடைவிடாது நீண்டதூரம் பயணிப்பதால் விமானிகளுக்கும், பயணிகளுக்கும் ஏற்படும் சோர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை அறிந்துகொள்ளவும் இப்பயணம் மேற்கொள்ளப்பட்டதாக ஆலன் கூறியுள்ளார். 19 மணி நேர பயணத்தில் பயணிகளுக்கு என்ன மாதிரியான உணவு மற்றும் பானங்களை கொடுக்கலாம், அவர்கள் எத்தகைய உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும், எப்போதெல்லாம் ஓய்வெடுக்கலாம் என்பன போன்றவை கவனத்தில் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

(உடற்பயிற்சி செய்யும் பயணிகள்)

இந்த விமானத்தை மொத்தம் நான்கு விமானிகள் மாறி மாறி இயக்கினர். அப்போது அவர்களது மூளை எவ்வாறு செயல்படுகின்றது, எவ்வளவு எச்சரிக்கையுடன் உள்ளனர் என்பன போன்றவை கருவிகள் பொருத்தி கண்காணிக்கப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close