[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

போதையில் தகராறு: மதுபான விடுதியில் உசேன் போல்ட் மோதல்!

usain-bolt-caught-up-in-mass-brawl-after-night-of-partying

பிரபல முன்னாள் ஒலிம்பிக் வீரர் உசேன் போல்ட், இரவு விடுதியில் போதையில் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் அதிவேக‌ மனிதர் என்று அழைக்‌கப்படும் உசேன் போல்ட், வெஸ்ட் இண்டீஸின் ஜமைக்காவில் பிறந்தவர். ஒலிம்பிக்கில் எட்டு தங்கப் பதக்கங்களை வென்றிருக்கும் இவர், 100, மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தொடர்ந்து மூன்று ஓலிம்பிக் போட்டிகளில் தங்கம் தட்டி சென்ற ஒரே வீரர்.

இவர் லண்டனில் உள்ள இரவு விடுதி ஒன்றுக்கு தனது நண்பர்களுடன் நேற்று சென்றார். அதிகாலை 3 மணியளவில் அங்கு ஆட்டம் பாட்டம் என அமர்க்களப்படுத்தினர். பின்னர் அந்த மதுபான விடுதியின் வெளியே அவரது நண்பர்களுக்கும் வேறு சிலருக்கும் மோதல் ஏற்பட்டது. இரு கோஷ்டியும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். உசேன் போல்ட்டும் அவர்களுடன் இணைந்து சிலரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

‘சுமார் 30 பேர், இந்த மோதலில் ஈடுபட்டனர். ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்டனர். உசேன் போல்டை அவரது நண்பர்கள் சிலர் கையை பிடித்து இழுத்துச் சென்றனர்’ என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். மேலும் சிலர், ’மோதல் ஏற்பட்டதும் சண்டையை விலக்கத்தான் உசேன் போல்ட் வந்தார்’ என்று தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close