[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS இலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச
  • BREAKING-NEWS டிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்
  • BREAKING-NEWS கரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு நிறுவனம் 435 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு
  • BREAKING-NEWS உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் எஸ்.ஏ.பாப்டே

ரியல் ‘சிம்டாங்காரன்’ - சாதனை படைத்த டிவி நடிகர்

1-hour-17-minutes-3-seconds-without-blinking

பிலிப்பைன்ஸைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகர் ஒருவர் ஒருமணி நேரம் 17 நிமிடம் 3 நொடிகள் கண்களை சிமிட்டாமல் இருந்து சாதனை செய்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகும் கலகலப்பான நிகழ்ச்சி ’ஈட் புலாகா’. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபலங்களுக்கு வித்தியாசமான டாஸ்க்குக்களை கொடுத்து செய்யச் சொல்வது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிரபலங்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. யார் அதிக நேரம் கண்களை சிமிட்டாமல் இருக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள் என்பதுதான் அந்த டாஸ்க்.

இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நடிகர் ’பால்லோ பால்ஸ்டிரஸ்’ ஒருமணி நேரம் பதினேழு நிமிடம் மூன்று நொடிகள் வரை கண்களை சிமிட்டாமல் இருந்து சாதனை செய்துள்ளார்.

இது அதிகாரப்பூர்வமற்ற கின்னஸ் சாதனையாக பார்க்கப்படுகிறது. என்றாலும் இந்தச் சாதனையை ரெக்கார்ட் செட்டர் இணையதளம் அங்கீகரித்துள்ளது. இதற்குப் முன்பு, மேற்கு அமெரிக்காவைச் சேர்ந்த  ‘ஜூலியோ ஜெய்மி’ என்பவர் ஒருமணி நேரம் ஐந்து நிமிடம் பதினோரு நொடிகள் கண்களை சிமிட்டாமல் இருந்து சாதனை செய்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close