[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
  • BREAKING-NEWS ஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகும் ‘காக்ரோச் சேலஞ்ச்’

trending-now-on-social-media-cockroach-challenge

சமூக வலைத்தளத்தில் புதிய வகை சவால் ஒன்று ட்ரெண்ட் ஆகி வருவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இதற்கு முன் ‘டென்(10) இயர்ஸ் சேலஞ்ச்’,‘கிகி சேலஞ்ச்’ போன்ற பல்வேறு சவால்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வந்தது குறிப்பிடத்தக்கது. பலரும் அந்த சேலஞ்சை ஏற்றுக்கொண்டும் தங்களது புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர். ஆனால் தற்போது ‘காக்ரோச் சேலஞ்ச்’ என்ற வித்தியாசமான சவால் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. 

அது என்ன ‘காக்ரோச் சேலஞ்ச்’?

கரப்பான்பூச்சியை முகத்தில் ஓடவிட்டு செல்ஃபி புகைப்படம் எடுப்பதுதான், இந்த ‘காக்ரோச் சேலஞ்ச்’. கரப்பான்பூச்சி என்றாலே பலருக்கும் பயம். அந்தப் பூச்சியை பார்த்தாலே, பலருக்கு அருவருப்பும், பயமும் தொற்றிக்கொள்ளும். அதை பார்த்ததும் பல அடி தூரம் ஓடி ஒளிந்து கொள்பவர்கள் உண்டு. அந்தப் பயத்தை, முறியடிக்கவே இந்தச் சவால் எனக் கருதி பலரும் இதை ஏற்றுக்கொண்டு தங்களது புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு  வருகின்றனர். 

இந்த ‘காக்ரோச் சேலஞ்’சை முதன்முதலில் தொடங்கியவர் பர்மாவைச் சேர்ந்த அலெக்சன் என்ற இளைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close