[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது

ரஷ்ய சிறுவன்.. துடிப்பது இந்திய இதயம்..! அன்புக்கு கட்டுப்பட்ட மருத்துவர்..!

russian-boy-indian-heart

தனக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவரை தன்னோடு சேர்ந்து ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியை காண வருமாறு ரஷ்ய சிறுவன் அன்போடு அழைத்திருக்கிறான். அதன்படி சிறுவனின் ஆசையை மருத்துவரும் நிறைவேற்றியுள்ளார்.

சென்னையை சேர்ந்த டாக்டர் பாலகிருஷ்ணனுக்கு ரோமன் முதல் முறை அறிமுகமானது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில்தான். ரஷ்யாவை சேர்ந்த சிறுவன் தான் ரோமன். இதயத்தசையில் இருந்த நோய் காரணமாக மூச்சு விடுவதற்கே சிரமப்பட்டு மிக மோசமான நிலையில் இருந்துள்ளான். இதனையடுத்து மருத்துவர் பாலகிருஷ்ணன், “உங்களது மகனுக்கு நிச்சயம் புது இதயத்தை பொருத்தியே ஆக வேண்டும்” என அவனின் தாயாரிடம் கூறியிருக்கிறார். ஆனால் படிப்பறிவு இல்லாத ரோமனின் தாய்க்கு இந்த விஷயம் இடியாக இருந்திருக்கிறது. என்ன செய்வது என்றே தெரியாமல் மனக் கஷ்டத்தில் இருந்திருக்கிறார்.

இதயத்தை யாராவது தானமாக தருகிறார்களா என தேட ஆரம்பித்திருக்கின்றனர். ஆனால் அதிலும் சிக்கல். இந்தியர்கள் யாராவது இதயத்தை யாராவது தானமாக வழங்க முன்வருகிறார்கள் என்றால் முதலில் அது இந்தியர்களுக்குதான் முன்னுரிமை வழங்கப்பட்டு கொடுக்கப்படும். இந்தியர்கள் யாரும் இல்லை என்ற பட்சத்தில்தான் வெளிநாட்டவர்களுக்கு அது பொருத்துவதற்காக வழங்கப்படும். அப்படிப்பட்ட இக்கட்டடான நேரத்தில் கடந்த ஜனவரி 4-ஆம் தேதி ரோமனுக்கு திடீரென நெஞ்சுவலி அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. அப்போது பக்கத்தில் இருந்தே டாக்டர் பாலகிருஷ்ணன் பார்த்துக் கொண்டார். ரோமனுக்கு வலி ஏற்படாதபடி அவரின் நெஞ்சை சுமார் 45 நிமிடங்கள் மசாஜ் செய்தும் விட்டுள்ளார். இந்த நேரத்தில்தான் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்திடம் இருந்து ஒரு தகவல் சென்றிருக்கிறது. மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம் தானத்திற்கு தயாராக இருப்பதாக தெரிவிக்ப்பட்டிருக்கிறது.

அந்த இதயம் மிகச் சிறந்த இதயம் இல்லை என பல அறுவை சிகிச்சை நிபுணர்களும் தெரிவித்திருக்கின்றனர். 35 சதவீதம் மட்டுமே இயங்கக்கூடிய அந்த இதயத்தை பலரும் நிராகரித்திருக்கின்றனர். ஆனால் அதனை வைத்து சிறுவனை காப்பாற்ற முடியும் என நம்பியிருக்கிறார் டாக்டர் பாலகிருஷ்ணன். எனவே நன்கொடை அளிப்பவர்களின் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். ஆனால் அந்த நேரத்தில் நன்கொடை அளிப்பவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் வேறு வழியில்லாமல் 10 நிமிடத்தில் அவரின் இதயத்தை எடுத்து கச்சிதமாக ரோமனின் இதயத்தில் பொருத்தியிருக்கிறார் பாலகிருஷ்ணன்.

தானமாக இதயம் வழங்கியவர் இளைஞர். அதனால் அவரின் இதயம் சற்று பெரியதாக இருந்துள்ளது. ஆனாலும் சிறுவனின் இதயத்தில் வேறு வழியில்லாமல் பொருத்தப்பட்டது. பின்னர் மெல்ல மெல்ல ரோமனின் உடல்நிலை சீரானது. இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் உடல்நலம் தேறி ரஷ்யாவிற்கு சென்றுவிட்டார் சிறுவன் ரோமன். இந்நிலையில் ரஷ்யாவில் உலக்கோப்பை கால்பந்து போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே “தற்போது உங்களுக்காக டிக்கெட் வாங்கி வைத்துள்ளேன். என்னுடன் இணைந்து நீங்கள் கால்பந்து போட்டியை கண்டு ரசிக்க வேண்டும்” என அழைப்பு விடுத்துள்ள சிறுவன் ரோமன் அதற்காக காத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறான். அதன்படி ரஷ்யாவிற்கு சென்ற மருத்துவர் பாலகிருஷ்ணன் சிறுவனுடன் இருந்து உலக்கோப்பை கால்பந்து போட்டியை ரசித்துள்ளார். இது இருவருக்குமே மறக்க முடியாத நாட்கள் என்று சொன்னால் அது பொய்யில்லை.

Courtesy: TimesofIndia

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close