[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் கொலை: கணவர் கைது!

man-charged-with-jessica-patel-murder-in-middlesbrough

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளிப் பெண் கொல்லப்பட்ட வழக்கில் அவர் கணவர் கைது செய்யப்பட்டார்.

இங்கிலாந்தில் உள்ள மிடில்ஸ்ப்ரோ பகுதியைச் சேர்ந்தவர் மிடேஷ் படேல். இவரது ஜெசிகா படேல். இருவரும் மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் படித்தபோது காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஜெசிகா தனது கணவருடன் வீட்டின் அருகில் ரோமன் ரோடு பார்மசஸி என்ற மருந்து கடையை கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வந்தார்.

இவர்கள் இந்தப் பகுதியில் பிரபலமானவர்களாக இருந்துள்ளனர். பார்மஸிக்கு அருகிலுள்ள அவென்யூவில் இவர்கள் வீடு இருக்கிறது. எப்போதும் பிசியாக இருக்கும் இந்த அவென்யூவில் உள்ள வீட்டில் கடந்த திங்கள்கிழமை பிணமாக கிடந்தர் ஜெசிகா. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

(கொலை நடந்த வீடு)

அதில் அவர், உடலில் ரத்தக் காயங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார், கொலையாளியைத் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் கணவர்தான் ஜெசிகாவை கொன்றது தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்துள்ள போலீசார், மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close