[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

முதல் பயணிகள் ஜெட் விமானத்தை இயக்கி சீனா சாதனை

c-919-first-chinese-built-passenger-jet-completes-beautiful-maiden-flight

முதல் பயணிகள் ஜெட் விமானம் சி919-ஐ இயக்கி சீனா சாதனை படைத்துள்ளது. சி919 விமானம் முழுக்க முழுக்க சீனாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டு காலமாக சீனா பயணிகள் ஜெட் விமானத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. அந்தக் கனவு தற்போது நனவாகியுள்ளது. சி919 என்று பெயரிடப்பட்டிருக்கும் இரண்டு எஞ்சின்கள் கொண்ட பயணிகள் ஜெட் விமானத்தை இன்று வெற்றிகரமாக பறக்க வைத்து சீன விமானத்துறை சாதனை படைத்துள்ளது. வானில் விமானம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பறந்தது. உலகில் முதன்முதலாக பயணிகள் ஜெட் விமானம் சோதிக்கப்பட்ட போது, அந்த விமானம் பறந்ததை விட சி919 அதிக நேரம் பறந்தது.

சி919 தயாரிப்புக் குழுவின் பொறியாளர் ஃபு சோங் கூறும்போது, சி919 விமானம் பறந்தை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. விமானம் மிகவும் அழகாகப் பறந்தது என்று கூறினார்.

சீனா பல ஆண்டுகளாக பயணிகள் ஜெட் விமானம் தயாரிக்க முயற்சித்து வந்தது. ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. ஆனால், தற்போது சி919 விமானம் மூலம் சீனா சாதித்துள்ளது. சி919 விமானம், போயிங் 737, ஏர்பஸ் 320 போன்ற விமானங்களின் தொழில்நுட்பம் மற்றும் அளவை ஒத்திருக்கிறது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close