[X] Close
JUST IN
 • BREAKING-NEWS மெர்சல் திரைப்பட காட்சிகளை யாருக்காகவும் நீக்கக் கூடாது: நடிகர் சங்கம்
 • BREAKING-NEWS மெர்சலில் சில காட்சிகளை நீக்குமாறு வலியுறுத்துவது அடக்குமுறை அரசியலின் வெளிப்பாடு: கருணாஸ்
 • BREAKING-NEWS மெர்சல் படத்தை வைத்து பலர் மோசமான அரசியலை செய்கின்றனர்: தமிழிசை
 • BREAKING-NEWS சென்சார் செய்த படத்தை திரும்ப சென்சார் செய்ய வாய்ப்பில்லை: எஸ்.வி.சேகர்
 • BREAKING-NEWS கருத்து சுதந்திரம் என்பது படைப்பின் அடிப்படை உரிமை: இயக்குநர் சீனு ராமசாமி
 • BREAKING-NEWS மெர்சல் படம் மூலம் மக்களுக்கு சமூக கருத்துகளை சொன்ன விஜய்க்கு பாராட்டு: விஷால்
 • BREAKING-NEWS பேச்சு, படைப்பு சுதந்திரத்திற்கு திமுக எப்போதும் துணை நிற்கும்: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கோட்டையில் ஏற்றப்பட்ட தேசிய கொடியில் ஓட்டை
 • BREAKING-NEWS நடிகர் விஜயின் மெர்சல் திரைப்படத்தில் இருந்து 4 காட்சிகள் நீக்க தயாரிப்பு தரப்பு முடிவு
 • BREAKING-NEWS தமிழகத்தில் டெங்கு மற்றும் காய்ச்சலுக்கு இன்று இதுவரை 4 பேர் உயிரிழப்பு
 • BREAKING-NEWS தஞ்சை கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி வெளியேறக்கோரி 155 ஆவது நாளாக போராட்டம்
 • BREAKING-NEWS காய்ச்சலால் தொடரும் மரணங்கள்: நேற்று மட்டும் 10 பேர் உயிரிழப்பு
 • BREAKING-NEWS திருவள்ளூரில் டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த 2,533 வீடுகளுக்கு நோட்டீஸ்: ஆட்சியர்
 • BREAKING-NEWS திண்டிவனத்தில் கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்பட்ட 2 கட்டடங்களுக்கு ரூ.2லட்சம் அபராதம்
உலகம் 11 Oct, 2017 04:59 PM

கேட்டலோனியாவின் பாரம்பரிய விளையாட்டு திருவிழா

spain-calls-time-on-discredited-catalan-referendum


உறியடித்தல், ஏறு தழுவல், வழுக்குமரம் ஏறுதல் போன்ற நமது பாரம்பரிய விளையாட்டுகளைப் போன்றே ஸ்பெயினின் கேட்டலோனிய பிராந்தியத்திலும் பாரம்பரிய வழக்கங்கள் இருக்கின்றன. ஜிம்னாஸ்டிக்கின் ஒரு வடிவமான மனித பிரமிடுகளை உருவாக்குவது கேட்டலோனியாவில் மிகப் பிரபலம்.

மனிதர்கள் ஒன்றிணைந்து ஒருவர் மேல் ஒருவர் ஏறி நின்று குறிப்பிட்ட உச்சத்தை எட்டுவர்.அப்படி மனித பிரமிடுகளாக மாறுபவர்கள் கேட்டலோனியாவில், காஸ்டெல்லர்ஸ் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் கூட்டாக உருவாக்குவது காஸ்டில்ஸ் என அழைக்கப்படுகிறது.பழங்காலபடி முதல் ஆகஸ்ட்,செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களில் காஸ்டில்ஸ் அமைக்கும் கலாச்சாரம் அங்கு உள்ளது. இந்த கலைஞர்கள் பல குழுக்களாக பிரிந்து பல்வேறு விதமான மனித பிரமிடுகளை உருவாக்கி பார்வையாளர்களை கவர்வர். ஒரு காஸ்டில்  முழு வெற்றி என்பது எந்த சிக்கலும் இல்லாமல் அனைவரும் இணைந்து உயரத்தை எட்டி,அதே போல் கலைவதுதான்.வலிமை மிக்கவர்கள் அடித்தளமாய் இருந்து தங்கள் மேலே ஏறி செல்பவர்களின் தூணாக இருப்பார்கள்.இப்படி மனித பிரமிடுகளை அமைப்பதன் பின்னணியில் வாழ்க்கையை எதிர்கொள்ள தேவையான பலம், ஸ்திரத்தன்மை, தைரியம், சமயோஜித புத்தி ஆகியவை உணர்த்தப்படுகின்றன.

கேட்டலன் திருவிழாவின் மற்றொரு முக்கிய அம்சமாக பார்க்கப்படுவது பட்டாசு திருவிழா. பேய்களைப் போல் வேடமணிந்து அனைவரும் பட்டாசுகளை கொளுத்துவதுதான் பட்டாசு திருவிழா. ட்ரம் இசையின் வாசிப்பிற்கு ஏற்ப பேய் போல் வேடமணிந்தவர்கள் நடனமாடுவர். சிலர் கொடும்பாவிகளையும் எரிப்பர். செப்டம்பர் மாதம் நடைபெறும் இந்த விழாவின் போது டவுன் சதுக்கம் முழுவதும் நரகம் போல அலங்கரிக்கப்பட்டிருக்கும். கூட்டத்தில் இருக்கும் மக்களை துரத்தி அவர்கள் அருகே சென்று பேய் வேடமிட்டவர்கள் பட்டாசுகளை வெடிக்க செய்வார்கள். பட்டாசுகளை வெடித்து தீர்த்தப் பின் அனைவரும் இணைந்து தண்ணீர் தண்ணீர் என பொருள் வரும் அய்குவா அய்குவா என்ற சொல்லை உச்சரிப்பர். அப்போது அருகிலுள்ள மக்கள் பேய்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடிப்பர்.

கேட்டலோனியாவில் புகழ்பெற்ற இன்னொரு பாரம்பரிய வழக்கம் சர்தனா. வட்டமாக பலர் நின்று நடனமாடுவது தான் சர்தனா. 16ஆம் நூற்றாண்டில் கேட்டலோனியாவில் இந்தப் பழக்கம் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விழாவில் 10 ஊது குழல்கள், சிறிய ட்ரம் ஆகியவற்றை கொண்டு 11 இசைக் கலைஞர்கள் இசையை வாசிப்பார்கள். இந்தக் குழுவிற்கு கோப்லா எனப் பெயர்.  நடனக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் கைக்கோர்த்தபடி வட்டமாக நின்று நடனமாடுவர். இந்த வட்டத்தில் யார் வேண்டுமானாலும் இணைந்துக்கொள்ளலாம். தங்களின் உடமைகளை நடுவில் வைத்து விட்டு ஆண் பெண் என வட்டத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம். தங்களுடன் கை கோர்த்துள்ளவரை எந்த நேரத்திலும் கைவிடாமல் இருக்க வேண்டும் என்பது இந்த நடனத்தின் சிறப்பம்சம்.பாரம்பரிய நடனக் கலைஞர்கள் தங்களுக்கான பிரத்யேக காலணியை அணிந்திருப்பர். துணியை தங்களின் இரு கால்களிலும் கட்டி இருப்பார்கள்.

இத்தகைய தனித்தன்மை கொண்ட பாரம்பரிய விழாக்களுக்கு மத்தியில் ஸ்பெயினிடமிருந்து பிரிந்து தனி நாடாக உதயமாகத் துடிக்கும் கேட்டலோனிய விடுதலைக் குரலும்  ஓங்கி ஒலிக்கிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close