[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 109 மீனவர்கள் காரைக்கால் துறைமுகம் வந்தடைந்தனர்
  • BREAKING-NEWS அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய எம்.ஏ.சித்திக் ஐஏஎஸ் தலைமையில் ஒருநபர் குழுவை அமைத்தது தமிழக அரசு
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக மத்திய அரசை வலியுறுத்த சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS நான் பூ அல்ல விதை; என்னை முகர்ந்து பார்க்காதீர்கள் விதைத்து பாருங்கள் வளருவேன் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழுவை அமைத்தார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் தலைமையில் மார்ச்.5,6,7 ஆம் தேதிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் என அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது- மு.க ஸ்டாலின்

பகத்சிங் கொலையாளியா?: லாகூர் நீதிமன்றத்தில் வழக்கு!

bhagat-singh-pakistan-case

பகத்சிங் சுதந்திரப் போராட்ட வீரர்; கொலைக்குற்றவாளி அல்ல என பாகிஸ்தானின் லாகூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பகத்சிங் பஞ்சாபில் உள்ள லாயல்பூர் மாவட்டத்தில், பங்கா என்னும் கிராமத்தில் சர்தார் குசன் சிங், வித்தியாவதி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் 
பிறந்தார். இந்தியாவின் முதல் மார்க்சிஸ்ட் என போற்றப்பட்டவர். 

இந்தியாவின் அரசியல் நிலைமையைப் பற்றி அறிக்கையளிக்க ஆங்கிலேய அரசு, சைமன் ஆணையக்குழுவை 1928இல் நிறுவியது. ஆனால் இக்குழுவில் ஒரு 
இந்திய உறுப்பினர் கூட இல்லாததால் இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் இதனை புறக்கணித்தன. அவ்வாணையம் 3௦ அக்டோபர் 1928இல் லாகூர் 
வந்தபோது அவ்வாணையத்திற்கு எதிராக லாலா லஜபதி ராய் அகிம்சை வழியில் ஓர் அமைதியான அணிவகுப்பை நடத்திச் சென்றார். ஆனால் காவலர்கள் 
வன்முறையைக் கடைபிடித்தனர். காவல் மேலதிகாரி ஜேம்ஸ் ஏ ஸ்காட் காவலர்களை தடியடி நடத்த ஆணையிட்டதோடு மட்டுமல்லாமல் தானாகவே ராயை 
தாக்கினார். இச்சம்பவத்தால் ராய் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அவர் பின்னர் 17 நவம்பர் 1928இல் காலமானார். லாலா லஜபதிராய் இறப்புக்கு காரணமான 
காவலரை சுட்டுக் கொன்றதற்காக 24 வயதில் தூக்குமேடையை தழுவியவர் பகத்சிங். இது பழைய வரலாறு. 

இப்பொழுது இம்தியாஸ் ரஷித் குரேஷி எனும் வழக்கறிஞர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் குற்றமற்றவர் என லாகூர் நீதிமன்றத்தில் வழக்கு 
தொடர்ந்திருந்தார். இவர் பகத்சிங் நினைவு அறக்கட்டளை ஒன்றை லாகூரில் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே இதுகுறித்த வழக்கு 
தொடரப்பட்டிருந்தாலும், இதுவரை எந்த விசாரணையும் நடத்தப்படாத நிலையில், இவர் மீண்டும் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இவர் தொடுத்துள்ள வழக்கில், சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் குற்றமற்றவர் என அறிவித்து, அவருக்கு தேசிய விருது வழங்கவேண்டும் எனவும் கோரியுள்ளார். 
மேலும், பிரிட்டிஷ் காவல்துறை அதிகாரி சாண்டர்ஸின் என்பவரின் கொலைவழக்கில் பகத்சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு ஆகிய மூவரும் குற்றவாளிகள் என 
அறிவிக்கப்பட்டனர். முதலில் ஆயுள்தண்டனை அறிவிக்கப்பட்டு, பின்னர் அவர்களுக்கு 1931ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதியன்று தூக்குதண்டனை 
நிறைவேற்றியது பிரிட்டீஷ் அரசு. 

இது உண்மையில் ஜோடிக்கப்பட்ட வழக்கு. மேலும், பகத்சிங் மற்றும் அவரது நண்பர்கள் பிரிட்டிஷாரின் காலனியாதிக்க ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று
ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கவேண்டும் என்று போராடினார். இது பிரிட்டிஷாரை உருத்தியது. பின்னரே, அவர் இந்த வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டார் என
தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு காவல்துறை அதிகாரி சாண்டர்ஸின் கொலைவழக்கு குறித்த முதல் தகவல் அறிக்கையை லாகூரின் காவல்துறையினர் அனார்க்கலி 
காவல்நிலையத்தில் கண்டுபிடித்தனர். 1928ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு எழுதப்பட்ட இந்த முதல் தகவல் அறிக்கையில், 
சாண்டர்ஸைக் கொன்றவர்கள் ‘அடையாளம் தெரியாத நபர்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ் வழக்கில் சம்பந்தமில்லாதமல் பகத்சிங் தொடர்பு படுத்தப்பட்டு தூக்கிலடப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் வழக்கறிஞர் குரேஷி கூறியுள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close