[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு
  • BREAKING-NEWS நவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

பிரசல்ஸில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்: சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு

brussels-attack-surveillance-footage-cab-driver-offer-clues-in-investigation

பெல்ஜியம் நாட்டுத் தலைநகர் பிரசல்ஸில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் குறித்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

விமானநிலையத்தில் உள்ள கண்காணிப்புக் காமிராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் 3 பேர் மீது சந்தேகம் எழு‌ந்துள்ளது. அதில்‌ இருவர் தற்கொலைப்படையாக வெடித்துச் சிதறியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அதேவேளையில், தலையில் தொப்பி அணிந்து‌ செல்லும் நபர் ‌தப்பிச் சென்றிருக்கலாம் என ச‌ந்தேகிக்கப்படுவதால் அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருக‌றது. விமானநிலையத்தில் இரண்டு குண்டுகள் வெடித்த நிலையில், 3-வது குண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டது.

தாக்குதலைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனில் நூற்றுக்கணக்கான விமானங்களும், ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரசல்ஸ் விமானநிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேரும், மெட்ரோ ரயிலில் நடத்தப்பட்ட தாக்குதலில் 20 பேரும் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர்‌ காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொ‌றுப்பேற்றுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close