[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

நேபாளத்தில் பாக். பிரதமரின் வெளியுறவு ஆலோசகருடன் சுஷ்மா சந்திப்பு

sushma-meets-sartaz-aziz-in-nepal

நேபாள நாட்டின் போக்ரா நகரில், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும், பாகிஸ்தான் பிரதமரின் வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

சார்க் நாட்டுத் தலைவர்களுக்கான காலை விருந்து நிகழ்ச்சியில், மரியாதை நிமித்தமாக இருவரும் சந்தித்து பேசினர். இதைத்தொடர்ந்து, இருநாட்டு உறவு குறித்து மாலையில் இருவரும் சந்தித்துப் பேசவுள்ளனர். அப்போது பதான்கோட் தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து சர்தாஜ் அஜீஸிடம் வெளியுறவு அமைசச்ர் சுஷ்மா ஸ்வாரஜ் பேசுவார் எனத் தெரிகிறது.

இதைத்தொடர்ந்து சார்க் அமைப்பில் இடம்பெற்றுள்ள மற்ற நாட்டுத் தலைவர்களையும் சுஷ்மா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் சார்க் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் 37வது மாநாடு போக்ராவில் நடைபெறுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close