[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

ஐஎஸ் தலைவர் குறித்து துப்புகொடுத்தால் ரூ.169 கோடி பரிசு... அமெரிக்கா அறிவிப்பு

us-offers-25-million-for-information-on-islamic-state-leader-abu-bakr-al-baghadi

உலக அளவில் தீவிரவாத செயல்களை அரங்கேற்றி வரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கான பரிசுத் தொகையை அமெரிக்க அரசு உயர்த்தியுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவை மையமாகக் கொண்டு செயல்படும் இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐஎஸ் தீவிரவாத இயக்கம், கொடிய தீவிரவாத இயக்கங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த இயக்கத்தின் தலைவராக உள்ள பாக்தாதி இரண்டு வருடங்களுக்கு முன்னர், ஐஎஸ் கைப்பற்றியுள்ள பகுதிகளின் கலிஃபாவாக தன்னைத் தானே அறிவித்துக் கொண்டார். பாக்தாதி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு பல்வேறு உலக நாடுகளும் பரிசுத் தொகையினை அறிவித்துள்ளனர். அந்தவகையில் அமெரிக்கா பாக்தாதி குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசினை கடந்த 2011ம் ஆண்டு அறிவித்தது. அந்த தொகையை 2.5 மடங்கு உயர்த்தி 25 மில்லியன் அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் தோராயமாக 169 கோடி ரூபாய்) தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஈராக் மற்றும் சிரிய எல்லையில் உள்ள மொசூல் அல்லது அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாக்தாதி பதுங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close