[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

வெளிநாட்டு தொழிலாளர்களால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பறிபோவதை ஏற்க முடியாது.. ட்ரம்ப் திட்டவட்டம்

won-t-allow-h-1b-visa-holders-to-replace-us-workers-donald-trump

வெளிநாடுகளில் இருந்து எச்ஒன்-பி விசா மூலமாக வரும் தொழிலாளர்களால் அமெரிக்க தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது என்று அந்நாட்டின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

லோவா மாகாணத்தில் நடந்த கூட்டத்தில் ஆதரவாளர்களிடையே பேசிய ட்ரம்ப், வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை கடைசி அமெரிக்கரின் உரிமையையும் பாதுகாக்க போராடுவோம் என்று பேசினார்.

தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அமெரிக்காவில் உள்ள பல்வேறு நிறுவனங்களும் ஊதியத்தைக் கணக்கில் கொண்டு எச்ஒன்-பி விசா மூலம் பல்வேறு நாடுகளில் இருந்து வேலைக்கு ஆட்களை பணியமர்த்துகின்றன. இந்த விசா மூலம் அமெரிக்காவில் பணிபுரிபவர்களில் இந்தியர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. டிஸ்னி வேர்ல்டு உள்ளிட்ட 3 அமெரிக்க நிறுவனங்கள் குறைவான ஊதியத்துக்காக வெளிநாட்டில் இருந்து வேலையாட்களை நியமிப்பதாக, அந்த நிறுவனங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட பணியாளர்கள் 2 பேர் வழக்குத் தொடர்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் ட்ரம்ப் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பைப் பாதுகாப்பது குறித்து பேசியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close