[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து.
  • BREAKING-NEWS வேதாரண்யத்தில் இரண்டு தரப்பினரிடையே மோதல்: காவல்நிலையம் மீது கல்வீச்சு
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் கங்கையம்மன் கோயில் குளத்தில் கிடந்த மர்மப் பொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு.
  • BREAKING-NEWS தமிழகத்தில் எந்த விதத்திலும் தீவிரவாதம் தலைதூக்க முடியாது: ஜெயக்குமார்
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

உலக மகா குண்டு பெண்ணுக்கு இந்தியாவில் அறுவை சிகிச்சை..!

india-doctor-to-operate-on-500kg-egyptian-woman

எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியாவைச் சேர்ந்த இமான் அகமது அப்துல்லாதி (36). இவர் உடல் எடை 500 கிலோ. இவர் இந்தியாவிற்கு சிகிச்சைக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகிலேயே அதிக உடல் எடை கொண்ட இவருக்கு இந்தியாவில் அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது. தொடக்கத்தில் யானைக் கால் நோய் தாக்கிய இவர் அதன்பின் படிப்படியாக நோய் கிருமிகள் உடல் முழுவதும் பரவி எடை அதிகரித்ததாக கூறப்படுகிறது. அந்த கிருமிகள் உடலில் உள்ள சுரப்பிகளை தாக்குவது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, இந்தியாவில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்ட இமான் அகமதுவுக்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இமான் அகமதுவின் விசா பிரச்சினைக்கு உதவுமாறு மும்பையைச் சேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர், மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்ற சுஷ்மா சுவராஜ், அந்தப் பெண் இந்தியா வருவதற்கு உதவியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த பெண்மணிக்கு இந்தியா வருவதற்கான விசா கிடைத்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close