[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு அரசியல் கூத்தாக மாறக்கூடும்...? சீன ஊடகங்கள்

modi-s-notes-ban-move-could-become-costly-political-joke-says-chinese-media

நாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தகுந்த முறையில் நடைமுறைபடுத்தபடவில்லை எனில் இத்தகைய மாபெரும் முயற்சி ஒரு அரசியல் கூத்தாக மாறக்கூடும் என சீன ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பினால் மட்டும் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது என சீன ஊடகங்கள் தகவல் தெரிவிக்கிறது. மோடியின் இந்த முயற்சியின் விளைவாக கள்ளபணம் மற்றும் கறுப்பு பணத்தை கண்டுபிடித்து அதனை ஒழிக்கா விட்டால் இது ஒரு அரசியல் கூத்தாக மாறிவிடும் என சீன நிபுணர்கள் கூறியுள்ளனர்.

500 மற்றும் 1000 நோட்டுகளை தடை செய்வதினால் மட்டும் கறுப்புபணத்தை ஒழிக்க முடியுமா? என சீனாவில் விமர்சனங்களும் எழுகிறது. இந்த முயற்சி சாத்தியமானால் மோடியின் ஆட்சியை அனைவரும் பாராட்டுவர். ஆனால் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தால் நிச்சயம் பல விமர்சனங்கள் எழும் என்பது சீன நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close