[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்வதால் மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு
  • BREAKING-NEWS ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிப்பார் - முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS கர்நாடக அரசைக் கவிழ்க்க பாரதிய ஜனதா கொடிய குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி சாடல்
  • BREAKING-NEWS மீண்டும் கர்நாடக முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவாரா எடியூரப்பா? அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் இன்று ஆலோசனை

காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடிக்க புதிய முயற்சி

mineral-water-bottles-labelled-with-pictures-of-missing-children

காணமால் போன குழந்தைகளைக் கண்டுபிடிக்க புதிய முயற்சியாக அவர்களது புகைப்படங்கள் அச்சிடப்பட்ட தண்ணீர்பாட்டில்கள் சீனாவில் விற்கப்படுகின்றன.

சீனாவில் ஆண்டுதோறும் 20,000 குழந்தைகள் காணாமல் போவதாக புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது. காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடிக்கும் புதிய முயற்சியாக கிழக்கு சீனாவின் குங்டாவூ நகரைச் சேர்ந்த தனியார் உணவு தயாரிப்பு நிறுவனம் குழந்தைகளின் புகைப்படங்களுடனான புதிய தண்ணீர் பாட்டில்களை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. ‘Baby come home’ என்ற தலைப்பில் காணமால் போன குழந்தைகளின் பெற்றோர் அனுமதியுடன் அவர்களின் புகைப்படங்களை அச்சிடுவதாக அந்த நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்ப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பாட்டில்கள் சூப்பர் மார்க்கெட்டுகள், ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close