JUST IN
 • BREAKING-NEWS நாகை: தலைஞாயிறு பகுதியில் கரும்பு விவசாயிகள் நடத்திய போராட்டம் வாபஸ்
 • BREAKING-NEWS காஞ்சிபுரம்: திருப்போரூரில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்
 • BREAKING-NEWS காஞ்சிபுரம்: குன்றத்தூர் அருகே பூந்தண்டலம் ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு
 • BREAKING-NEWS சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிதாக 5 மேம்பாலங்கள்: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதியை நாளை காலை 11 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS அரசு முறை பயணமாக ஜூலை 4 முதல் 6 வரை இஸ்ரேல் செல்கிறார் பிரதமர் மோடி
 • BREAKING-NEWS முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவு மண்டபம் அமைக்கப்படும்: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மகாராணி போல் செயல்படுகிறார்: அமைச்சர் கமலக்கண்ணன்
 • BREAKING-NEWS யாருடனும் கருத்து வேறுபாடு கிடையாது: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS போயஸ் தோட்டத்தை நினைவிடமாக்க வேண்டும்: சிதம்பரம் அதிமுக எம்எல்ஏ பாண்டியன்
 • BREAKING-NEWS தமிழகத்தில் விரைவில் மணல் விலை குறையும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு
 • BREAKING-NEWS ஜிஎஸ்டியில் தமிழகத்தின் 80% கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுள்ளது: அமைச்சர் கே.சி.வீரமணி
 • BREAKING-NEWS எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்பு இலச்சினையை முதலமைச்சர் வெளியிட்டார்
 • BREAKING-NEWS துணை குடியரசுத் தலைவர் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை
மாவட்டம் 29 Mar, 2016 07:26 PM

மாற்றுதிறனாளியிடம் லஞ்சம் வாங்கிய திருச்சி அரசு மருத்துவமனை பணியாளர்: பிரத்யேகக் காட்சி

திருச்சியில் மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ்கள் வழங்க மருத்துவ பணியாளர் லஞ்சம் பெற்று மருத்துவருக்கு கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லஞ்சப்பணம் சிலநூறுகள் என்ற போதும், மாற்றுத்திறனாளிகளுக்கான சேவையில் கூட லஞ்சம் தலைதூக்கும் சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்‌படுத்தியுள்ளது. இதுதொடர்பாக புதிய தலைமுறையின் பிரத்யேகக் காட்சிகளை பார்க்கலாம்.

திருச்சி அருகே அரியமங்கலம் வடக்கு காட்டூர் பகுதியை சேர்ந்த‌வர் வனிதா‌. இவரது கணவர் ஆண்ட்ரூஸ் ‌மனைவிக்காக மாற்றுத் திறனாளி சான்றிதழ் கோரி திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையை நாடினார். மருத்துவ வாரியத்திடம் விண்ணப்பித்து சான்றிதழ் பெற காலதாமதமாகும் என்று சொல்லப்பட்டதால் ‌இவர் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் உதவியை‌ நாடினார். இதையடுத்து உடன் வந்த சங்கத்தைச் சேர்ந்‌த‌ அப்துல் சலாம் அணுகியபோது, சான்றிதழ்‌தர 300 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் தொடங்கி அதிகாரிகள் வரை புகார் அளித்தும் நடவடிக்கை எ‌டுக்கப்படவில்லை என்று ஆண்ட்ரூஸ் தெரிவித்தார். இதையடுத்து 300 ரூபாய் பணத்தை லஞ்சமாக அளித்து சான்றிதழை மருத்துவ பணியாளர் பெற்றுத்தந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து புதிய தலைமுறை செய்திக்குழு அங்கு சென்று விசாரித்தபோது, மருத்து‌வ பணியாளர் அதனை‌ மறுத்தார். இறுதியில் பணம் வாங்கியதை மருத்துவ பணியாளர் ஒப்புக்கொண்டார்.

இது தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், குற்றம் புரிந்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads