[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் கெடு விதித்துள்ளார்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

அணை கட்டும் கேரள அரசின் முயற்சி: தடுத்து நிறுத்த ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

gk-vasan

சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசின் முயற்சியை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டினால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவதோடு கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் என கூறியுள்ளார்.

கேரள அரசின் இந்த முயற்சியை தடுக்க தமிழக அரசு உடனடியாக ‌நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள ‌வாசன், தடுப்பணை கட்ட வழங்கிய அனுமதியை மத்திய அரசு உடனடியாக‌ ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

வரும் 30ஆம் தேதி அனைத்து விவசாய ‌சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ‌நடத்தும் போராட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் பங்கேற்கும் எனவும் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்‌.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close