அரசுப் பேருந்து ஒன்றின் கூரை ஒழுகியதால் அதன் ஓட்டுநர் இருக்கையில் குடையை பொருத்திக்கொண்டு பேருந்தை இயக்கினார்.
திண்டுக்கல் நகரம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்தது. திண்டுக்கல்லில் இருந்து அய்யம்பாளையம் செல்லும் அரசுப் பேருந்தின் கூரை சேதமடைந்திருந்ததால் பேருந்திற்கு உள்ளேயே மழை நீர் ஒழுகியது. அதில் பயணித்தவர்கள் பேருந்துக்குள்ளேயே குடைபிடித்திருந்தனர்.
பயணிகளின் நிலை இவ்வாறு இருக்க, பேருந்தை இயக்கிய ஓட்டுநரோ, தனது தலைக்கு மேலே குடையை பொருத்தி வைத்து தனது பணியைத் தொடர்ந்தார். பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் செல்போனில் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
வீடியோ:
அசாம் மக்கள் ஏன் இப்படி கொந்தளிக்கிறார்கள்? - வரலாற்று காரணம் இதுதான்..!
‘சென்னை ஹோட்டல் ஊழியரை கண்டுபிடிக்க உதவுங்கள்’- தமிழில் வேண்டுகோள் விடுத்த சச்சின்
பாலியல் குற்றங்களுக்கு சினிமாவில் பெண்களை சித்தரிக்கும் விதமும் காரணமே - கனிமொழி
டி20 உலகக் கோப்பையில் தோனி களமிறங்குவார் - பிராவோ நம்பிக்கை
“கலப்பட டீ தூள், காலாவதியான குளிர்பானங்கள்” - திடீர் சோதனையில் சிக்கிய உணவுப் பொருட்கள்