மக்களவை தேர்தலில் ஏற்படுத்தப்பட்ட கூட்டணி தொடரும் என்று துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “யார் கட்சி தொடங்கினாலும், எந்தவித பாதிப்பும் அதிமுகவிற்கு ஏற்படாது. அமெரிக்கா சென்றது அரசு முறை பயணமாக தான் இருந்தது. தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு அமெரிக்க வாழ் தமிழர்களோடு கலந்து பேசினேன். அத்துடன் அங்கு உள்ள முதலீட்டாளர்களை சந்தித்து பேசினேன். அவர்களும் இங்கே வருவதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளனர். உலக வங்கியிடம் சென்று பேசியுள்ளோம். அவர்களும் ஒப்புதல் தந்துள்ளனர். அமெரிக்கா பயணம் முழு வெற்றி பெற உள்ளது.
மேலவளவு குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட விஷயத்திற்கு நீதிமன்றம் தங்களுடைய கருத்துகளைத் சொல்லியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர்.நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்படுத்தப்பட்ட கூட்டணி தொடரும். கூட்டணி குறித்து புதிய கட்சிகளும் எங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதிமுக ஒரு வலுவான இயக்கம். எங்கள் கட்சியில் நாங்கள் கலந்து பேசி தகுதியுள்ளவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு தருவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
“குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்” - 5 மாநில அரசுகள் போர்க்கொடி
50 நாட்களை நிறைவு செய்த ‘பிகில்’, ’கைதி’ - ரசிகர்களுக்கு இயக்குநர் நன்றி
சாய்ந்த 50 ஆண்டுகள் பழமையான மரம் - மீண்டும் அழகாக நட்டு வைத்த அதிகாரிகள்
பாலியல் வன்கொடுமைக்கு 21 நாட்களுக்குள் தூக்கு - ஆந்திர பேரவையில் நிறைவேறியது திஷா மசோதா
அசாம் போராட்டத்தால் ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை ஒத்திவைப்பு?