சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபட சென்ற பெண்ணை தீட்சிதர் தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த ஆரம்ப சுகாதார நிலைய செவிலியரான லதா, தனது மகனின் பிறந்தநாளையொட்டி பூஜை செய்ய நடராஜர் கோயிலுக்கு சென்றுள்ளார். ஆலயத்தில் உள்ள முக்குருணி பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்ய தீட்சிதர் தர்ஷனிடம் அர்ச்சனை தட்டை வழங்கியுள்ளார். அப்போது தீட்சிதர் மந்திரம் சொல்லி பூஜை செய்யாமல் அமர்ந்த இடத்தில் இருந்துக் கொண்டே தீபாராதனை காட்டியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கேள்வி எழுப்பியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தால் அப்பெண்ணை தீட்சிதர் தாக்கியுள்ளார். இதில் அப்பெண் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இது தொடர்பாக லதா அளித்த புகாரையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.
மொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்..! - அசத்திய பள்ளி மாணவி
என்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..?
“விலையேற்றத்தை கேட்டால், வெங்காயம் சாப்பிடுவதில்லை என்கிறார் நிதியமைச்சர்” - ராகுல் காட்டம்
“வெங்காயம், பூண்டு, மாமிசம் என எல்லாவற்றையும் சாப்பிடுவதை நிறுத்துங்கள்” - ஆசம் கான்
“ரிஷாப் தவறவிட்டால், ஸ்டேடியத்தில் தோனி பெயரை ரசிகர்கள் கத்துகிறார்கள்” - விராட் வருத்தம்