[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS அயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
  • BREAKING-NEWS விருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது
  • BREAKING-NEWS சிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது
  • BREAKING-NEWS தெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னையில் இன்று முதல் 5 நாட்களுக்கு ரயில் சேவையில் மாற்றம் 

train-services-to-be-changed-in-chennai-from-today

கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் பணி நடைபெறுவதால் ஐந்து நாட்களுக்கு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம்-செங்கல்பட்டு பிரிவில், கூடுவாஞ்சேரியில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால் நவம்பா் 11-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே இரவு 8.01, 9.18 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படவுள்ளன.  இந்த ரயில்கள் கடற்கரை-தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும். செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே இரவு 10.15, 11.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையேயான பகுதியில் ரத்து செய்யப்படவுள்ளன. இந்த ரயில்கள் தாம்பரம்-கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும்.

Image result for சென்னை ரயில் சேவை மின்சார ரயில்

மேலும் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே அதிகாலை 3.55, 4.35, 5.15, 5.50, காலை 6.05, 6.43, மாலை 5.18, இரவு 8.01, 9.18 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படவுள்ளன. செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே அதிகாலை 3.55, 4.35, 4.50, காலை 6.40, 6.55, இரவு 7.25, 10.15, 11.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே ரத்து செய்யப்படவுள்ளன. இதுபோல, செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே காலை 8.40 மணிக்கு இயக்கப்படும் செமி பாஸ்ட் மின்சார ரயில் செங்கல்பட்டு -சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்படவுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close