[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட உதயநிதி ஸ்டாலின் சார்பில் விருப்பமனு
  • BREAKING-NEWS ரஃபேல் தீர்ப்பு எதிர்க்கட்சியினருக்கு சரியான பதிலடி - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS மனைவி நளினி மற்றும் உறவினர்களைப் பார்க்க முருகனுக்கு அனுமதி வழங்குக - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS பிரதமர் மோடியை விமர்சித்ததாக ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடித்து வைப்பு
  • BREAKING-NEWS ரஃபேல் கொள்முதலில் ஊழல் நடைபெறவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது உச்சநீதிமன்றம்

மாணவிகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட ஆசிரியர் பணியிடை நீக்கம்

school-teacher-suspended-in-rasipuram-for-making-sexual-advances-to-students

இராசிபுரம் அருகே அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசி அத்துமீறலில் ஈடுபட்டதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த  ஒடுவன்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(37). இவர் கொங்களம்மன் கோவில் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் 49-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் மாணவிகளிடம் ஆசிரியர் சுரேஷ் ஆபாசமாக பேசுவதாக அம்மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். இது குறித்து மாணவிகள், “ நிர்வாண சிலைகளின் படத்தை காட்டியதுடன், உடல் உறுப்புகள் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் தொடர்ந்து  கூறுவார். அத்துடன்  ஆபாசமாக சில வார்த்தைகள் கூறுவார் என குற்றஞ்சாட்டியுள்ளனர்.

(ஆசிரியர் சுரேஷ்)

மாணவிகளின் உடலை தொட்டு பேசுவதுடன், வாடி போடி என்று அழைத்ததாகவும் தெரிகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகள், அவர் செய்த பாலியல் தொந்தரவுகளை கடிதமாக எழுதி வட்டார கல்வி அலுவரிடம் கொடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் விசாரணை மேற்கொண்டு கணித ஆசிரியர் சுரேஷை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close