[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்ற கணவர்

namakkal-husband-arrest-murder-trying-his-wife

நாமக்கல்லில் மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். 

நாமக்கல் நகராட்சி ராமாபுரபுதூர் அன்புநகர் 3 சாவடி தெருவை சேர்ந்த ரூபிகாவிற்கும் கரூர் மாவட்டம் மூலிமங்களத்தை சேர்ந்த சிவப்பிரகாசம் என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்றது. இவர்களுக்கு ஒரு வயதில் மகன் உள்ள நிலையில் கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரூபிகா நாமக்கல்லில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார். 

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி அதிகாலையில் மனைவியை பார்க்க வந்த சிவப்பிரகாசம் அவருடன் சமாதானம் பேசியுள்ளார். இருப்பினும் ரூபிகா சமாதானம் ஆகவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிவப்பிரகாசம் ரூபிகாவின் வீட்டின் அருகிலிருந்த மின்மாற்றியிலிருந்து மின்சாரம் எடுத்து வீட்டின் ஜன்னலில் இணைத்து மின்சாரம் பாய்ச்சியுள்ளார். 

ஜன்னலை தொடும்போது ரூபிகா மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் வகையில் இணைப்பு கொடுத்துவிட்டு சிவப்பிரகாசம் வீட்டிலிருந்து சென்று தலைமறைவானார். அப்போது ரூபிகாவின் தாய் வளர்மதி வீட்டை விட்டு வெளியே வந்த பார்த்தபோது வீட்டின் அருகே சந்தேகப்படும் படி மின்சார ஒயர்கள் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

இதையடுத்து, அருகில் இருந்தவர்களின் உதவியுடன் மின் இணைப்பை துண்டித்து தனது மருமகன் சிவபிரகாசம் மீது நாமக்கல் கால்நிலையத்தில் புகார் அளித்தார். சிவப்பிரகாசம் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த சிவபிரகாசத்தை தேடி வந்தனர். 

கடந்த 5 மாதங்களாக தேடி வந்த நிலையில் இன்று பெங்களூரில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சிவப்பிரகாசத்தை நாமக்கல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது கடந்த 2018-ம் ஆண்டு மாமனார் தங்கவேலுவை கொலை செய்த வழக்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close