[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே
  • BREAKING-NEWS “நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”- தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
  • BREAKING-NEWS பொறியியல் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் - தமிழக அரசு

தோண்டப்பட்ட குழிக்குள் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் இறங்கிய வீரர்

one-firefighter-went-inside-to-rik-borwell-in-trichy

குழந்தை சுஜித்தை மீட்க ரிக் இயந்திரம் மூலம் தோண்டப்பட்ட குழிக்குள் ஆய்வு செய்ய ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் ஏணி வழியே வீரர் ஒருவர் இறங்கியுள்ளார்.

திருச்சி மணப்பாறையில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணி நான்காவது நாளாக நடைபெற்று வருகிறது. குழந்தை விழுந்த ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகே ரிக் இயந்திரம் மூலம் துளையிடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, தோண்டப்பட்ட குழிக்குள் உள்ள மண், பாறையின் தன்மை குறித்து ஆய்வு செய்தபின் தொடர்ந்து குழி தோண்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, குழிக்குள் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் பாதுகாப்பு ஏணி வழியே வீரர் ஒருவர் இறங்கியுள்ளார். 55 அடிக்கு கீழ் பாறையின் தன்மை குறித்து வீரர் ஆய்வு செய்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு அவர் மேலே வந்தார். அவர் வரும்போது கல் ஒன்றினை ஆய்வுக்காக எடுத்து வந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close