[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு

‘மாணவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை’ - பெற்றோர்கள் கைகலப்பு வரை சென்று ஒருவர் பலி

school-students-fight-changed-parents-fight-one-father-die-in-dindigul

திண்டுக்கல்லில் இரு மாணவர்களிடையே ஏற்பட்ட சண்டையால் தந்தைகள் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமம் பூண்டியில், பள்ளி மாணவர்கள் இருவருக்கிடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. சண்டையை மாணவர்கள் இருவரும் அவரவர் பெற்றோரிடம் சென்று கூறியதில், இரண்டு மாணவர்களின் பெற்றோரும் பொது இடத்தில் சண்டையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. ஒரு மாணவனின் தந்தையான முருகன் என்பவர், லோகநாதன் என்ற மற்றொரு மாணவனின் தந்தையை தாக்கியுள்ளனர். 

இதில் மயக்கமடைந்த லோகநாதனை மன்னவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் கொண்டு செல்லும் வழியில் உயிர் இழந்துவிட்டார். மாணவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையை பேசி தீர்த்து அவர்களை நல்வழிப்படுத்தாத பெற்றோர்கள் இருவர் சண்டையிட்டதில், ஒரு உயிர் பிரிந்த சம்பவம் பூண்டி கிராம மக்களிடயே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தையை இழந்த மாணவரும் அவரது குடும்பத்தினரும் சோகக்கடலில் மூழ்கியுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close