[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்
  • BREAKING-NEWS உள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • BREAKING-NEWS சர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு
  • BREAKING-NEWS தூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்

கடல்சார் நிறுவனம் பெயரில் தில்லுமுல்லு - நூற்றுக்கணக்கான இளைஞர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி

hundred-of-youngsters-foolish-by-job-frauds-in-chennai

சென்னையில் கடல்சார் வேலைவாய்ப்பு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான இளைஞர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டுள்ளது. 

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள  சினர்ஜி மாரிடைம் என்ற கடல்சார் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி இந்த மோசடி நடைபெற்றுள்ளது. ஜெயக்குமார், வேல்கண்ணன், பாண்டியராஜ், பெலிக்ஸ், ஆதி ஆகியோர் லட்சக்கணக்கான ரூபாய் ஊதியத்தில் கப்பலில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளனர். அதை நம்பி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மும்பை உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை இவர்களிடம் கொடுத்துள்ளனர். 

இந்த மோசடிக்கு சினர்ஜி மாரிடைம் நிறுவன ஊழியர் ஜோன்ஸ் என்பவர் உடந்தையாக இருந்துள்ளார். அதன்மூலம் பணம் கொடுத்த இளைஞர்களுக்கு சினர்ஜி மாரிடைம் நிறுவன வளாகத்திலேயே இந்தக் கும்பல் தேர்வும் நடத்தியுள்ளது. பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கித்தராமல் ஏமாற்றியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சென்னையில் தங்கியிருந்த வேல் கண்ணன் மற்றும் பெலிக்ஸை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close