[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

போலி நெய் தயாரித்தவர்கள் மீது வழக்குப்பதிவு : சென்னையில் அதிகாரிகள் நடவடிக்கை

chennai-police-register-complaint-for-fake-ghee-production

சென்னையில் தரமற்ற முறையில் நெய் தயாரித்த ஸ்ரீ கிருஷ்ணா நெய் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை கண்ணம்மாப்பேட்டையில் உள்ள காவேரி நகர் பகுதியில் தரமற்ற முறையில் நெய் தயார் செய்து விற்பனைக்கு அனுப்பப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்த அதிகாரிகள் 3 டன் எடை கொண்ட நெய்யை பறிமுதல்‌ செய்தனர். அதிலிருந்த 5 மாதிரிகளை தஞ்சாவூர் உணவு பாதுகாப்பு கூடத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பரிசோதனையின் முடிவில் அனைத்தும் தரமற்ற நெய் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலி நெய் தயாரித்த உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், டன் கணக்கிலான போலி நெய்யை அப்புறப்படுத்தினர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close