[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS குழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி

தனியார் விடுதியில் ஒருவர் தற்கொலை - காரணம் யார் என கடிதம்..!

a-man-suicide-in-vizhuppuram-lodge-wrote-a-letter-for-whose-are-reason-for-suicide

திண்டிவனத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தனியார் தங்கும் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த செஞ்சியை அடுத்த கவரை கிராமத்தினை சேர்ந்த விஜயபாஸ்கர் (40) என்பவர் நீண்ட நேரமாக அறையில் இருந்து வெளியே வராததால், நேற்றிரவு விடுதி மேலாளர் பாலசுப்பிரமணி சந்தேகமடைந்துள்ளார். பின்னர் விஜயபாஸ்கர் தங்கியிருந்த அறையின் கதவைத் தட்டி அழைத்துள்ளார்.

வெகு நேரம் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து விடுதியின் தொழிலாளி ஒருவர் விஜயபாஸ்கர் தங்கி இருந்த அறையின் சாவி துவாரத்தின் வழியாக பார்த்துள்ளார். அப்போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியிடைந்துள்ளார். இதையடுத்து விடுதி மேலாளர் திண்டிவனம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்து விஜயபாஸ்கரின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனை செய்ய முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விஜயபாஸ்கரின் உடைமைகளை பரிசோதித்து பார்த்தபோது, அவர் தற்கொலைக் காரணம் யார் என கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. அந்தக் கடிதத்தில் 5 பேரின் பெயர்களை எழுதி வைத்துள்ள விஜயபாஸ்கர், அவர்கள் தன்னை ஒரு நாள் முழுவதும் அடித்ததாக குற்றம்சாட்டியுள்ளார். கடன் தொல்லை காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close