விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட, திமுக எம்பி கவுதம சிகாமணி விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.
இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட, திமுக எம்பி கவுதம சிகாமணி விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்பம் தெரிவித்து, முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனான கவுதம சிகாமணி தனது சொந்த செலவில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் தற்போது திமுக இளைஞரணி செயலாளராக உள்ளார்.
‘பாலியல் வன்கொடுமை நடந்தபின் வா’ புகாரளிக்க வந்த பெண்ணை திருப்பி அனுப்பிய போலீசார்
டெல்லி தொழிற்சாலை தீ விபத்து: தலைமறைவாக இருந்த உரிமையாளர் கைது
"முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் தடையாக உள்ளனர்" சுப்ரமணியன் சுவாமி
உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் அறிவிப்பு
கர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர் !