[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

தமிழன் தாழ்த்தவும் மாட்டான்; தாழவும் மாட்டான் - ஸ்டாலின் கடிதம் 

stalin-write-letter-to-volunteers

ஒரே தேசம் - ஒரே மொழி - ஒரே ரேஷன் ஆகியவற்றை எதிர்த்து போராட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தந்தை பெரியாரின் பிறந்த நாளான இன்று திமுகவின் 70ஆவ‌து அகவை எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், கொண்டாட அழைக்கவில்லை என்றும், தமிழ் மொழியை காக்க போராட்டத்திற்கு அழைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 1967ஆம் ஆண்டு பேர‌றிஞர் அண்ணா ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் இந்தி ஆதிக்கத்திற்கு தமிழ்நாட்டில் இடமில்லை என இருமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தினார் என்பதை ஸ்டாலின் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். 

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரும் குஜராத்தியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பதை தெரிவித்துள்ள ஸ்டாலின், அவர்கள் இந்திக்கு வக்காலத்து வாங்குகிறார்கள் என்றால் அது அவர்களை இயக்குகின்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல்திட்டம் எனத் தெரிவித்துள்ளார். தமிழன் யாரையும் தாழ்த்தவும் மாட்டான் என்றும் யாருக்கும் தாழவும் மாட்டான் என்பதை மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையில் அணிவகுப்போம் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் எனக்கூறி மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தை முடித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close