[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

3-வது திருமணத்திற்கு முயற்சி.. கணவரை அடித்து உதைத்த மனைவிகள்..!

wife-s-attacked-husband-near-coimbatore

கோவையில் மூன்றாவது திருமணம் செய்து கொள்ளவிருந்த இளைஞரை முதல் இரண்டு மனைவிகள் தேடி பிடித்து அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சூலூர் நேரு நகரைச் சேர்ந்த அரவிந்த்‌ என்பவர் ராசிப்பாளையத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு இவருக்கும், திருப்பூர் கணபதிபாளையத்தை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன இரண்டு வாரங்களில் அரவிந்தும், அவரது பெற்றோரும் கொடுமைப்படுத்தியதாக பிரியதர்ஷினி பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்து தனது தாயார் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

இந்நிலையில், கரூர் மாவட்டம் பசுபதி பாளையத்தை சேர்ந்த அனுப்பிரியா என்பவரை தனது முதல் மனைவிக்கு தெரியாமல் கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அனுப்பிரியாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. திருமணமாகி சில மாதங்கள் கழித்து அரவிந்தும் அவரது தந்தையும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அனுப்பிரியா குழந்தையுடன் தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

இந்நிலையில், மூன்றாவது திருமணம் செய்வதற்காக சமூக வலைதளங்களில் பெண் தேடி வந்த அரவிந்த் குறித்து முதல் இரண்டு மனைவிகளுக்கும் தெரியவந்தது. இது குறித்து இரண்டுபேரும் அரவிந்த் வீட்டிற்குச் சென்று விளக்கம் கேட்டனர். உரிய பதில் கிடைக்காததால் அரவிந்த் வேலை செய்யும் இடத்திற்குச் சென்று அவரை இரண்டு மனைவிகளும் சரமாரியாக தாக்கினர். பின்னர் அங்கிருந்து அரவிந்தை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தங்களை ஏமாற்றி மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற அரவிந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரண்டு மனைவிகளும் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அரவிந்திடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close