[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொறியியல் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் - தமிழக அரசு
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

அழகிய மழலை குரலில் ஆளுநர் தமிழிசையை ஆங்கிலத்தில் வாழ்த்திய சிறுமி

a-girl-kid-greet-tamilisai-on-being-appointed-telangana-governor

தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கு சிறுமி ஒருவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

தமிழக பாஜக தலைவராக பதவி வகித்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நேற்று நியமிக்கப்பட்டார். இதனை அடுத்து அவர் தன் தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிறுமி ஒருவர் வாழ்த்து தெரிவிக்கும் வீடியோவை தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில்,தெலங்கானா ஆளுநராக பொறுப்பேற்கும் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அந்தச் சிறுமி ஆங்கிலத்தில் மழலை குரலில் வாழ்த்துகளை தெரிவிக்கிறார். மேலும் இது எங்களுக்கெல்லாம் பெருமையான தருணம் என்றும், இந்த வெற்றி உங்களது கடின உழைப்புக்கும், போராட்டத்துக்கும் கிடைத்த பரிசு எனத் தெரிவித்துள்ளார்.  சிறுமியின் வாழ்த்து வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை, ''வாழ்த்துகளால் நெகிழ வைத்த சிறுமி ஆயுஷிக்கு எனது வாழ்த்துகள்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close