[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

13 மாவட்டங்களில் சவுடு மண் எடுக்கத் தடை - உயர்நீதிமன்ற கிளை

madurai-high-court-banned-to-take-savudu-sand-from-13-districts-in-tamilnadu

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் வரம்பிற்கு உட்பட்ட 13 மாவட்டங்களில் சவுடு மண் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. 

நாகேந்திரன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் ராமநாதபுரத்தில் உள்ள சித்தார்கோட்டை, குலசேகரன்கால் உள்ளிட்ட கிராமங்களில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக மண் அள்ளப்படுவதாக குற்றம்சாட்டியிருந்தார். இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் மண் அள்ள தடை விதிக்க வேண்டுமென கோரியிருந்தார். இது போன்ற பல மனுக்கள் நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோரின் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன. 

     

அப்போது, சவுடு மண் எடுப்பது தொடர்பாக நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியும் அவை முறையாக பின்பற்றப்படுவதில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், மதுரைக்கிளையின் வரம்பிற்கு உட்பட்ட 13 மாவட்டங்களில் சவுடு மண் அள்ள மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்குவதற்கு இடைக்கால தடை விதித்தனர். ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தால், அவற்றையும் ரத்து செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை அக்டோபர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close